முகத்துல ரொம்ப எண்ணெய் வழியுதா? இந்த 6 பொருள் இருக்கும்போது கவலை எதுக்கு... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 2, 2022

முகத்துல ரொம்ப எண்ணெய் வழியுதா? இந்த 6 பொருள் இருக்கும்போது கவலை எதுக்கு...

முகத்துல ரொம்ப எண்ணெய் வழியுதா? இந்த 6 பொருள் இருக்கும்போது கவலை எதுக்கு...



சருமத்தில் எண்ணெய்ப் பசையுடன் இருப்பது மிகவும் எரிச்சலாக இருக்கும். ஏன் முகத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் சுரக்கிறது? அதற்கான காரணங்கள் என்ன? எப்படி அதை செலவில்லாமல் வீட்டிலேயே சரிசெய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். அவை அளவோடு சுரப்பதும் சருமம் வறட்சியாக இல்லாமல் ஓரளவுக்கு லேசாக எண்ணெய்ப் பசையுடன் இருப்பதும் தான் நல்லது. ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக முகத்தில் எண்ணெய் சுரப்பிகள் சுரக்க ஆரம்பிக்கும்.
அதனால் முகத்தில் பருக்கள், வலியுடன் கூடிய பருக்கள், கட்டிகள் ஆகியவை உண்டாகி சருமத்தின் அழகையே கெடுத்துவிடும். அப்படி இல்லாமல் வீட்டிலுள்ள பொருள்களை வைத்து எப்படி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவது என்று பார்ப்போம்.
​கற்றாழை ஜெல்

சருமப் பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருப்பது கற்றாழை தான். எல்லா விதமான சருமப் பிரச்சினைகளையும் அது சரிசெய்யும்.

ஒரு ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல்லை எடுத்து அதை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம் செய்து வந்தாலே சருமத்தில் அதிகமாக எண்ணெய் சுரக்காது. சருமமும் பொலிவாக இருக்கும்.

​மோர்
வறண்ட சருமத்திற்கு பால் எப்படி நல்ல மாய்ச்சரைஸராக இருக்குமோ அதேபோல எண்ணெய் பசையுள்ள சருமத்துக்கு மோர் அல்லது தயிர் சிறந்த தீர்வாக இருக்கும்.

தயிரை நன்கு கடைந்து அல்லது மோரை எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவிட்டு, வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி வர முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பது கட்டுக்குள் வரும். முகமும் மிக மென்மையாக குழந்தையின் சருமம் போல மாறிவிடும்.

​கஸ்தூரி மஞ்சள்
சருமத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதால் வலியுடன் கூடிய முகப்பருக்கள் உண்டாகும். அவற்றை நகங்களால் சிலர் கிள்ளிவிடுவார்.

அது அப்படியே சருமத்தில் வடுவாக மாறிவிடும். அப்படி ஆகாமல் இருக்க கஸ்தூரி மஞ்சளை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

15 - 20 நிமிடங்கள் வரை அதை முகத்தில் உலர விட்டு பின் குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் ஜொலிக்கும். முகத்தில் எண்ணெய் வழிவதும் கட்டுக்குள் வரும்.

​பப்பாளி

சருமத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதைக் கட்டுப்படுத்த பப்பாளி கூழ் மிகச்சிறந்த தீர்வைத் தரும்.

பழுத்த பப்பாளியை நன்கு குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இது சருமத் துளைகளுக்குள் ஆழமாகச் சென்று அழுக்குகளை வெளியேற்றும். அதோடு எண்ணெய் சுரப்பதைக் கட்டுப்படுத்தி சருமத்தின் நிறத்தையும் கூட்டுகிறது.

​துளசி

சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக எண்ணெயை சுரக்காமல் இருக்க துளசி சிறந்த தீர்வு,

ஆம். 10-15 துளசி இலைகளை நன்கு சுத்தம் செய்து அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள்.

மஞ்சள் மற்றும் துளசி இரண்டுமே சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் தொற்றுக்களை நீக்கும். அதோடு எண்ணெய் வழிவதைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

​சந்தனம்

சருமத்திலுள்ள எண்ணெய் பசையை வெளியேற்ற சந்தனம் மிகச் சிறப்பாக வேலை செய்யும்.

இது சருமத் துளைகள் வழியே சென்று ஆழத்திலுள்ள அழுக்குகளையும் வெளியேற்றி சருமத்தைச் சுத்தம் செய்யும்.

சந்தனத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் அப்ளை செய்து இரவு முழுக்க அப்படியே விட்டு விடுங்கள்.

பின்னர் காலை எழுந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி செய்வதால் எண்ணெய் வழியாமலும் இருக்கும். சருமமும் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.


No comments:

Post a Comment

Post Top Ad