மதிமுகவுக்கு ‘ 0 ’; கொரோனாவிலும் கொந்தளித்த வைகோ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 2, 2022

மதிமுகவுக்கு ‘ 0 ’; கொரோனாவிலும் கொந்தளித்த வைகோ!

மதிமுகவுக்கு ‘ 0 ’; கொரோனாவிலும் கொந்தளித்த வைகோ!

மதிமுக போட்டியிட சீட்டு வழங்க முடியாது என திமுக கூறி இருப்பது வைகோவை ரொம்பவே வெறுப்பேத்தி கொந்தளிக்க வைத்து உள்ளது. திமுகவின் இந்த அணுகுமுறையைப் பார்த்து மதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.


இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என, 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கிய நிலையில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன.

அந்தவகையில் கடலூர் மாநகராட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் வார்டு பங்கீட்டிலும், வேட்பாளர்களை அறிவிப்பதிலும் தொடர்ந்து இழுபறியான சூழல் நிலவி வருகிறது.
இதற்கு காரணம் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டு வாய்மொழி ஒப்பந்தம் முடிந்துள்ளது.

ஆனால் அதே சமயம் திமுக கூட்டணியில் பிரதான கட்சிகளில் ஒன்றாக விளங்கும் மதிமுகவுக்கு போட்டியிட வாய்ப்பு எதுவும் வழங்கப்படாது என்றும், வெறுமனே ஆதரவு மட்டும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை சற்றும் எதிர்பாராத மதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து கடலூர் மாவட்டத்தில் மதிமுகவுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறித்து திமுக மாவட்ட செயலாளர்களிடம் விளக்கி கூறி வருகின்றனர்.

இந்த தகவல் வைகோவை ரொம்பவே வெறுப்பேத்தி கொந்தளிக்க வைத்து உள்ளது. ஏற்கனவே கொரோ தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வைகோவுக்கு திமுக கொடுத்துள்ள ஷாக் ட்ரீட்மெண்ட் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



No comments:

Post a Comment

Post Top Ad