மனமகிழ் மன்றங்களில் டாஸ்மாக் சரக்கு... அரசு என்ன சொல்கிறதென கேட்கும் கோர்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 17, 2022

மனமகிழ் மன்றங்களில் டாஸ்மாக் சரக்கு... அரசு என்ன சொல்கிறதென கேட்கும் கோர்ட்!

மனமகிழ் மன்றங்களில் டாஸ்மாக் சரக்கு... அரசு என்ன சொல்கிறதென கேட்கும் கோர்ட்!மதுபானத்தை கையாளாத மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் எடுத்துச்செல்லும் மதுபானத்தை அருந்த, கிளப்புகள் உரிமம் பெற வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் படிப்பகம் மற்றும் டென்னிஸ் கிளப் உள்ளிட்ட மனமகிழ் மன்றங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், தங்கள் மனமகிழ் மன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து வாங்கிவரும் மதுபானங்களை அருந்துவதாகவும், அதற்காக லைசான்ஸ் வாங்க வேண்டுமென அரசு அதிகாரிகளும், காவல்துறையும் கட்டாயப்படுத்துவதாகவும், மனமகிழ் மன்றத்தில் மது விற்பனை செய்யாதபோது அவ்வாறு கட்டயப்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.இந்த வழக்கு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் பொது இடத்தில் மதுபானம் அருந்துவது தடை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மனுதாரர் கிளப்பின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் படிப்பகம் மற்றும் டென்னீஸ் கிளப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கிளப் தரப்பில் தங்களது மனமகிழ் மன்றத்தில் மது விற்பனை செய்யப்படுவதோ, மதுவை கையாள்வதோ இல்லை என்றும், உறுப்பினர் கொண்டு வரும் மதுபானங்களை அவர்கள் மட்டுமே குடித்துவிட்டு செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

மனமகிழ் மன்றம் என்பது பொது இடம் இல்லை என்பதாலும், உள்ளே விற்பனை நடைபெறவில்லை என்பதாலும் உரிமம் வாங்க சட்டப்படி அவசியம் இல்லை என்றும், காவல்துறை இதுதொடர்பாக வற்புறுத்தக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. மேலும் தனி நபர் மதுபானங்களை வைத்துக்கொள்ளவும், பொது இடம் தவிர பிற இடங்களில் வைத்து குடிக்க தடையில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.No comments:

Post a Comment

Post Top Ad