வாவ்... இந்தோனேஷிய மொழியில் முதல் முறையாக ரீமேக் செய்யப்படும் தமிழ் படம் 'ஒத்தசெருப்பு'!
பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேஷியாவின் அதிகாரப்பூர்வ மொழியான பஹாஸா மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர் பார்த்திபன். வார்த்தைகளில் விளையாடும் பார்த்திபன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது.
இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் அவரை பாராட்டி தீர்த்தனர். இந்தப் படத்துக்காகப் பல்வேறு விருதுகளையும் குவித்தார் பார்த்திபன்.
ஒத்த செருப்பு திரைப்படம் ஸ்பெஷல் ஜூரிக்கான தேசிய விருதையும் இப்படம் வென்றது. இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். இந்தியில் அமிதாப் பச்சன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேஷியாவின் அதிகாரப்பூர்வ மொழியான
பஹாஸா மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. பஹாஸா மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள முதல் தமிழ் படம் ஒத்த செருப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment