இந்தியாவில் அதிகரிக்கும் "போதை" பெண்கள், ஆண்கள் எல்லாம் திருந்துகிறார்களாம்... ரிப்போர்ட் சொல்வது இதான்...
தேசிய குடும்ப ஆரோக்கிய சர்வேயில் பெண்களிடம் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரத்தை கீழே காணுங்கள்
ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் மத்திய அரசுா சார்பில் தேசிய குடும்ப ஆரோக்கிய குறித்த ஒரு சர்வே எடுக்கப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் NFHS என அழைக்கப்படும் இந்த சர்வே குறித்த முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் குடிபழக்கம் உள்ள ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதும், அதே நேரத்தில் பெண்களிடம் குடிபழக்கம் இருப்பது அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி கடந்த 2015-16 அறிக்கையில் 15 வயதிற்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்களின் எண்ணிக்கை 2.4 சதவீமாக இருந்தது தற்போது 2020-21ம் ஆண்டிற்கான அறிக்கையில் 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கை 39.3 சதவீதத்திலிருந்து 28.8 சதவீதமாக குறைந்துள்ளது.
பொதுவாக கிராமங்களை விட நகரங்களில் தான் குடி பழக்கம் அதிகமாக இருக்கும் என நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் நகரங்களை விட கிராமங்களில் உள்ள மக்களுக்கு தான் குடி பழக்கம் அதிகமாக உள்ளது.
நகர்புறங்களில் 22.7 சவீத ஆண்கள் மட்டுமே குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருப்பதாகவும், கிராமப்புறங்களில் 30.2 சதவீத ஆண்கள் குடிபழக்கம் உள்ளவர்களாக இருப்பதாக அறிக்கை சொல்கிறார்.
கடந்த 5 ஆண்டிற்கு முன்பு நகர்புறங்களில் 32.2 சதவீத ஆண்கள் குடிபழக்கம் உள்ளவர்களாக இருந்த நிலையில் தற்போது அது 22.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதே போல கடந்த 5 ஆண்டுகளில் கிராம பகுதியில் 2.6 சதவீத பெண்கள் குடிப்பழக்கம் கொண்டவர்களாக இருந்த நிலையில் அது தற்போது 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கிராமபுறங்களில் 41.3 சதவீதமாக இருந்த ஆண்களின் குடிப்பழக்கம் தற்போது 30.2 சதவீதமாக குறைந்துள்ளது.மது பழக்கம் மட்டுமல்ல புகையிலை பழக்கமும் பெண்களிடம் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை சொல்கிறது. 2015-16ம் ஆண்டில் பெண்களிடம் 17.3 சதவீதமாக இருந்த புகையிலை பழக்கம் தற்போது 26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதில் நகர் புற பெண்களிடம் 16.6 சதவீதமாக உள்ளது. ஆண்களை பொறுத்தவரை 55.9 சதவீதமாக இருந்த புகையிலை பழக்கம் தற்போது 51.6 சதவீதமாக குறைந்துள்ளது.இந்த அறிக்கை மிகப்பெரிய ஷாக்கை நமக்கு ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆண்களிடம் மது மற்றும் புகையிலை பழக்கம் குறைந்து வரும் நிலையில் பெண்களிடம் அதிகரித்து வருவது அப்பட்டமாக தெரிகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
No comments:
Post a Comment