முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்; ஊழியர்கள் செம ஹேப்பி!
ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக மத்திய அரசிடம் தங்களது கருத்துக்களை தெரிவிப்போம் என்று தெரிவித்தார்.
புதுச்சேரியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற மின்துறை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம், முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இன்று முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மாலை முதலமைச்சர் ரங்கசாமி உடன் பேச்சுவார்த்தை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் மின்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் நமச்சிவாயம்; ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக மத்திய அரசிடம் தங்களது கருத்துக்களை தெரிவிப்போம் என்று தெரிவித்தார். அதுவரை தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து மின்துறை ஊழியர் சங்க பொது செயலாளர் வேல்முருகன் கூறுகையில்; பொதுமக்கள், மின்துறை ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் தனியார் மயமாக்கல் குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார்.இதனை தொடர்ந்து, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். மேலும் இன்று முதல் வழக்கம் போல மின் துறை ஊழியர்கள் பணி செல்லலாம் எனவும் ஊழியர்கள் சங்க பொது செயலாளர் வேல்முருகன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment