டெஸ்லாவை வரவேற்கிறோம்; ஆனால்...; வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர் நிதி கட்கரி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 10, 2022

டெஸ்லாவை வரவேற்கிறோம்; ஆனால்...; வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர் நிதி கட்கரி!

டெஸ்லாவை வரவேற்கிறோம்; ஆனால்...; வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர் நிதி கட்கரி!


டெஸ்லா நிறுவனத்தை வரவேற்பதாகவும், அதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவமனமாக உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அவரது நிறுவனத்தை இந்தியாவில் அமைக்க எலான் மஸ்க் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் இந்திய பிரிவுக்கான பெயரை பதிவு செய்தது அவரது நிறுவனம். மேலும், டெஸ்லா தனது ஏழு கார்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதலையும் பெற்றுள்ளது.
ஆனால், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்தார். டெஸ்லா நிறுவனம் கோரியுள்ள இறக்குமதி வரி குறைப்பு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு எலான் மஸ்க் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு அந்நிறுவனம் கடிதமும் எழுதியுள்ளது.

இதனிடையே, டெஸ்லா இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து தெரிவித்த எலான் மஸ்க், இந்திய அரசுடன் இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம் என்று தெரிவித்தார். இதையடுத்து, தெலங்கானா, மேற்குவங்கம், தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சார்ந்த அமைச்சர்கள் தங்களது மாநிலத்தில் வந்து உற்பத்தி ஆலையை அமைக்குமாறு எலான் மஸ்க்குக்கு வேண்டுகோள் விடுத்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad