சுயேச்சையாக போட்டியிடும் மனைவிக்கு கணவர் அனுப்பிய விவகாரத்து நோட்டீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 18, 2022

சுயேச்சையாக போட்டியிடும் மனைவிக்கு கணவர் அனுப்பிய விவகாரத்து நோட்டீஸ்!

சுயேச்சையாக போட்டியிடும் மனைவிக்கு கணவர் அனுப்பிய விவகாரத்து நோட்டீஸ்!


தமது பேச்சை மீறி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்த மனைவிக்கு கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காள மாநிலம், தெற்கு டம்டம் நகராட்சிக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒன்பது வார்டில் போட்டியிட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுர்ஜித்ராய் சுவுத்ரி என்பவர் விருப்ப மனு செய்திருந்தார்.

ஆனால் அவருக்கு பதிலாக அவரது மனைவி ரீட்டா ராய் சவுத்ரிதாசுக்கு தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் முதலில் வாய்ப்பு அளித்தது.


பிறகு திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை... வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு கட்சி மேலிடம் ரீட்டா ராயை வற்புறுத்தியுள்ளது. அவரது கணவரும், கட்சித் தொண்டர்களும் இதேபோன்று வலியுறுத்தவே ரீட்டா ராய் கடுப்பாகி உள்ளார்.தன்னால் வேட்பு மனுவை வாபஸ் பெற முடியாது எனவும், கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்தால் சுயேச்சையாக களமிறங்க வேண்டிவரும் என்று ராய் அதிரடியாக அறிவிித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றவே, ரீ்ட்டா ராய் கோபித்து கொண்டு தமது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இதனால் ஆத்திரமடைந்த சுர்ஜித்ராய் சுவுத்ரி, தமது மனைவிக்கு தற்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், "கட்சியை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. இதனால் என் அரசியல் வாழ்க்கையே பறிபோய்விடும். எனவேதான் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில், தமது அரசியல் வாழ்க்கைக்காக கட்டிய மனைவியையே கணவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள விஷயம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.No comments:

Post a Comment

Post Top Ad