மிஸ்டர் கெஜ்ரிவால்.. நேரடியா பதில் சொல்லுங்க.. எஸ் ஆர் நோ?.. ராகுல் அதிரடி!
காலிஸ்தான் ஆதரவு குறித்து குமார் விஸ்வாஸ் கூறியுள்ள தகவல் குறித்து கெஜ்ரிவால் விளக்கம் தர ராகுல் காந்தி கோரிக்கை.
குமார் விஸ்வாஸ் சொல்வது உண்மையா இல்லையா என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுள்ளார்.
நேரடியா பதில் சொல்லுங்க.. அவர் சொல்வது உண்மையா பொய்யா.. எஸ் ஆர் நோ என்று ராகுல் காந்தி கேட்டுள்ள இந்த கேள்வி வைரலாகியுள்ளது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் குமார் விஸ்வாஸ். இவர் ஒரு இந்திக் கவிஞர், அரசியல்வாதி, கல்லூரி விரிவுரையாளர். ஆம் ஆத்மி கட்சியில் முன்பு செயலாற்றினார். அப்போது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
குமார் விஸ்வாஸ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்துப் பரபரப்பாக பேசியிருந்தார். அந்த வீடியோவில் குமார் விஸ்வாஸ் கூறியிருந்ததாவது:
ஒரு நாள் கெஜ்ரிவால் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் பஞ்சாப் முதல்வர் ஆவேன் அப்படி ஆக முடியாவிட்டால் சுதந்திர காலிஸ்தான் நாட்டின் முதல் பிரதமர் ஆவேன் என்று கூறினார். நான் அதிர்ந்து போய் விட்டேன். காலிஸ்தான் போராளிகளை அவர் ஆதரித்தார். அவருக்கு எப்படியாவது பதவியில் அமர வேண்டும் என்ற வெறி இருந்தது. அதை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் கருதினார் என்று கூறியிருந்தார் குமார் விஸ்வாஸ்.
இந்த வீடியோவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேசமயம், கெஜ்ரிவால் இவ்வாறு பேசியது தொடர்பாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்தில் இந்த வீடியோ தொடர்பாக புகார் கொடுத்தது.
இதையடுத்து இந்த வீடியோவை ஒளிபரப்ப மீடியாக்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. ஆனால் பின்னர் அந்தத் தடையை விலக்கிக் கொண்டு விட்டது. தெரியாமல் தடை விதித்து விட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.
குமார் விஸ்வாஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை விட்டு விலகி விட்டார். அதன் பிறகு அவர் தொடர்ந்து கெஜ்ரிவாலைக் குறி வைத்து ஏதாவது பேசி வருகிறார். தனிப்பட்ட தாக்குதலையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கேள்வி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், மிஸ்டர் கெஜ்ரிவால். நேரடியாக பதில் சொல்லுங்கள் - குமார் விஸ்வாஸ் சொல்வது உண்மையா? எஸ் ஆர் நோ.. என்று அதில் ராகுல் காந்தி கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment