இந்த காலத்தில் இப்படி ஒரு நேர்மையான மனிதரை பார்ப்பது அரிது… ரயில்வே ஊழியருக்கு குவியும் வாழ்த்து!
திருச்சி ரயில்நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட 31 சவரன் நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ரயில்வே அஞ்சலக ஊழியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.திருச்சி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் 31 சவரன் நகை அடங்கிய பை ஒன்றை தவறவிட்டுச்சென்றுள்ளார். அந்த பை அவ்வழியாக சென்ற திருச்சி ரயில்வே அஞ்சலக அலுவலகத்தில் பணிபுரியும் கிஷோர்குமார் கண்ணில் பட்டுள்ளது. அதனை எடுத்து பார்த்த அவர், அதில் தங்க நகைகள் இருப்பதை அறிந்து திருச்சி இரும்புப்பாதை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதனை திருச்சி இரும்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் பரிசோதனை செய்து,
நகை இருப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகைக்கு உரியவர்களான இஸ்லாமிய தம்பதி நேரில் வந்து நகைகளை பெற்றுச்சென்றனர்.
பிறர் பொருள் மீது ஆசைபடாமல் கீழே கிடைத்த 31 சவரன் தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான ஊழியர் கிஷோர்குமாருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதோடு அவரது நேர்மையை பலரும் பாராட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment