செவிலியருடன் உல்லாசமாக இருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!
புதுச்சேரியில் திருமண ஆசைவார்த்தை கூறி செவிலியருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணத்திற்கு மறுத்த இளைஞர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி அருகே உள்ள பாகூர் மணமேடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(27) இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் இளம்பெண் ஒருவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் சந்தோஷ் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக கர்ப்பமடைந்த அந்த பெண் பலமுறை கருகலைப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் விரைவில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி சந்தோஷிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கடந்த 16-ம்
தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மன்மத இளைஞர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment