10 நிமிடத்தில் 10 லட்சம்... ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு இப்படியொரு சோதனை!
நேரத்துக்கு வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 10 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
இலங்கையின் முன்னணி விமான சேவை நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் பயணியாற்றும் விமானிகள் நேரத்துக்கு வேலை என்ற பாலிசியை மிகவும் கண்டிப்பாக கடைபிடித்து வருகின்றனர்.
இந்த பாலிசியின்படி, விமானம் புறப்படும் நேரத்தை எந்தவொரு காரணத்துக்காகவும் தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் விமானத்தை டேக் ஆஃப் செய்ய வேண்டும்.இந்த நிலையில், தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்படவிருந்தது.அப்போது கடைசி நிமிடத்தில் 3000 கிலோ கிராம் எடையுள்ள வெற்றிலை பொதியை விமானத்தில் ஏற்ற வேண்டியுள்ளது என்று நிறுவனத்தின் வர்த்தக பிரிவில் இருந்து பைலட்டுக்கு (விமானி) தகவல் வந்தது. இந்த தகவலை நிராகரித்த விமானி, நேரத்துக்கு வேலை என்ற தமது சங்கத்தின் கொள்கைபடி சரியாக 9 மணிக்கு விமானத்தை எடுத்துவிட்டார்.இதனால் வெற்றிலை பொதியை விமானத்தில்
ஏற்ற இயலாமல் போனதால், 10 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாககஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 5 -10 நிமிடங்கள் தாமதமாக இயக்க விதிமுறைகள் அனுமதிக்கின்றன என்பதும், இலங்கை விமானிகள் சங்கத்தில் சுமார் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment