மயிலாடுதுறை: அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி மரணம்!
மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி மாரடைப்பால் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி அன்னதாட்சி (64). இவர் மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். வரும் 19-ம் தேதி தேர்தல் என்பதால் அன்னதாட்சி அதிமுக தொண்டர்களுடன் நேற்று காலையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்துள்ளார்.
தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று காலை அன்னதாட்சி உணவு சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார். மதியம் உணவு அருந்திய அன்னதாட்சி மாலையில் சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த குத்து விளக்கு பூஜையில் கலந்துகொண்டுள்ளார். பூஜையில் கலந்து கொண்டிருந்தபோது அன்னதாட்சிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அன்னதாட்சி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி இறந்துபோனதால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், அதிமுகவினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வேட்பாளர் ஒருவர் இறந்துள்ளதால் தேர்தல் ஆணைய விதிகளின் படி 19வது வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment