கொத்தாக சீட்டை கிழித்த ஓபிஎஸ், இபிஎஸ்: இப்படி ஒரு எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 14, 2022

கொத்தாக சீட்டை கிழித்த ஓபிஎஸ், இபிஎஸ்: இப்படி ஒரு எச்சரிக்கை!

கொத்தாக சீட்டை கிழித்த ஓபிஎஸ், இபிஎஸ்: இப்படி ஒரு எச்சரிக்கை!அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக அக்கட்சியைச் சேர்ந்த 77 பேரை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை மாநகர், திருச்சி மாநகர், மதுரை மாநகர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை புறநகர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் 77 பேர், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிவிப்பில்,

"கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெறுதல்; அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட காரணங்களாலும்,கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் சேர்ந்த மகாலட்சுமி, வேல்முருகன், சுசீலா, ஸ்ரீராம், ராதாமணி.கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அஜய், ஆனந்த் குமார்,
கோவை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த குணாளன் உள்ளிட்ட 5 பேர்,
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தேவர் ரூபன்,
மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு உள்ளிட்டவர்களும்,
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கலியமூர்த்தி, தட்சிணாமூர்த்தி
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரஃபிக், நித்தியா, தேன்மொழி,
சென்னை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரம், பாக்கியராஜ், கார்த்திக், மஞ்சுளா, பவானி

No comments:

Post a Comment

Post Top Ad