முதல்வர் ஸ்டாலின் நேரடி பிரச்சாரத்திற்கு வராதது ஏன்?- முன்னாள் அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 14, 2022

முதல்வர் ஸ்டாலின் நேரடி பிரச்சாரத்திற்கு வராதது ஏன்?- முன்னாள் அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

முதல்வர் ஸ்டாலின் நேரடி பிரச்சாரத்திற்கு வராதது ஏன்?- முன்னாள் அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!தமிழக மக்களின் வெறுப்புகளை பெற்றதால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி பிரச்சாரத்திற்கு வர அச்சமடைந்து காணொளி வாயிலாக பிரச்சாரம் செய்வதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து அரசியல் கட்சியில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் குளித்தலை நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தின் போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:
“திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல் காணொளி காட்சி மூலமாகவே, பிரச்சாரம் மேற்கொள்கின்றார். அவரது மகனும் சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மட்டுமே தமிழக அளவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கொரோனா காரணம் கூறி டிவிக்கு முன்னர் அமர்ந்திருப்பதாகவும், ஏனென்றால், அவரது மகன், ஓரிரு தினங்களுக்கு முன்பு கரூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது, இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1,000 எங்கே என்று கேட்டு உள்ளனர். அதற்கு நான்கு வருடங்கள் இருக்கே என்று கூறிச் சென்றுள்ளார்.
நீட் தேர்வு ரகசியம் கரூரில் வந்து சொன்ன உதயநிதி, கடைசிவரை போராடுவது மட்டுமே நீட் தேர்வின் ரகசியம் என்று கூறியதை எடுத்துரைத்தார். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், கேஸ் சிலிண்டருக்கு மானியம், அரசு ஊழியர்களுக்கு ஒரே பென்சன் திட்டம் வழங்கப்படும் என்றெல்லாம் கூறி ஆட்சியைப் பிடித்தார் மு க ஸ்டாலின். ஆனால் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலைதான் தற்போது வரை தொடர்கிறது என்று கூறிய முன்னாள் அமைச்சர், இது மட்டுமில்லாமல் ஏழை எளிய மக்கள், வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று எண்ணத்துவங்கியுள்ளனர் என்றார். தோல்வி பயத்தினால் மட்டுமே நகரமைப்பு உள்ளாட்சித் தேர்தலை திமுக தள்ளிப்போட்டு வந்ததும், ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தேர்தலை நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து தற்போது தேர்தல் நடைபெற உள்ளதாக கூறினார்


No comments:

Post a Comment

Post Top Ad