யாரும் கள்ள ஓட்டு போடவில்லை: எல்.முருகன் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 19, 2022

யாரும் கள்ள ஓட்டு போடவில்லை: எல்.முருகன் விளக்கம்!

யாரும் கள்ள ஓட்டு போடவில்லை: எல்.முருகன் விளக்கம்!



கள்ள ஓட்டு விவகாரத்தில் மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.முன்னதாக, பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாகவும், பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டு வருவதாகவும் பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். அதன் உட்சபட்சமாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கு வேறு ஒருவரால் கள்ள வாக்காக போடப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் வாக்கு, வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.இந்த நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அண்ணா நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளதாகவும், தவறு கண்டறியப்பட்டு அதன் பிறகு வாக்களித்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad