நெருங்கும் தேர்தல் - பஞ்சாப் முதல்வரின் மருமகனை கைது செய்த அமலாக்க துறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 4, 2022

நெருங்கும் தேர்தல் - பஞ்சாப் முதல்வரின் மருமகனை கைது செய்த அமலாக்க துறை!

நெருங்கும் தேர்தல் - பஞ்சாப் முதல்வரின் மருமகனை கைது செய்த அமலாக்க துறை!முதலமைச்சரின் மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்
பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை ஒட்டி பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் களை கட்டி உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் சட்ட விரோத மணல் குவாரிகள், அவற்றுடன் தொடர்புடையவர்கள் மீது அமலாக்கத் துறையினர் பண மோசடி வழக்கு பதிவு செய்தனர். சண்டிகர், மொஹாலி, லுாதியானா மற்றும் பதான்கோட் உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள சட்ட விரோத மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
இதில், அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்து 8 கோடி ரூபாயை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர். மேலும் ஏராளமான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து பூபிந்தா் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


நேற்று ஜலந்தரில் உள்ள அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணைக்கு பூபிந்தா் சிங் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பூபிந்தா் சிங்கை கைது செய்துள்ளதாக அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சரின் உறவினர் கைது செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad