மீண்டும் முழு ஊரடங்கு... மாநில அரசு அதிரடி முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 4, 2022

மீண்டும் முழு ஊரடங்கு... மாநில அரசு அதிரடி முடிவு!

மீண்டும் முழு ஊரடங்கு... மாநில அரசு அதிரடி முடிவு!கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தொடர் நடவடிக்கையாக வரும் ஞாயிற்றுக்கிழமையும் (பிப்ரவரி 6) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாவுது அலை பல்வேறு மாநிலங்களில் குறைய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து கொரோனா 3.0 அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்துதான் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1- 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்படி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா மூன்றாவது அலையில் இருந்து விடுபட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும்போது அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் கொரோனா இன்னும் குறைந்த பாடில்லை.

அந்த மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது அரசையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது இரண்டு பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சராசரியாக ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக அந்த மாநில சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த கேரள மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய அம்சமாக, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அன்றைய தினம் மருந்தகங்கள், ஹோட்டல் பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

துபாயில் இருந்தபடி மாநில அரசு அதிகாரிகளுடன் ஆன்லைன் மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு முதல்வர் பினராயி விஜயன் இந்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக வார இறுதி நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமையும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும், கொரோனா எண்ணிக்கையை பொருத்து பிப்ரவரி 13 ஆம் தேதி ஊரடங்கு நடவடிக்கையை தொடரலாமா, தளர்த்தலாமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்புடும் என்றும் கேரள மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad