இந்தியாவின் உதவியைக் கேட்ட உக்ரைன் தூதர்.. ஆனால் நேருவை புகழ்ந்து பேசிட்டாரே! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 24, 2022

இந்தியாவின் உதவியைக் கேட்ட உக்ரைன் தூதர்.. ஆனால் நேருவை புகழ்ந்து பேசிட்டாரே!

இந்தியாவின் உதவியைக் கேட்ட உக்ரைன் தூதர்.. ஆனால் நேருவை புகழ்ந்து பேசிட்டாரே!


ரஷ்ய அதிபர் புடினுடன் பேசி போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என உக்ரைன் கோரிக்கை.
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் பேசினால் அவர் நிச்சயம் கேட்பார். போரும் நிற்கும் என்று உக்ரைன் நாட்டு தூதர் இகோர் போலிகா கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து நகரங்களும் பற்றி எரிகின்றன. விமான நிலையங்கள், விமானப்படை தளங்களை ரஷ்யா படையினர் நிர்மூலமாக்கியுள்ளனர்.ரஷ்யாவின் இந்த அதி வேக தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் தொடர்ந்து திணறி வருகிறது. பல நாடுகளிடமும் உக்ரைன் உதவி கேட்டுள்ளது. இந்தியாவிடமும் அது உதவி கோரியுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் இகோர் போலிகா கூறுகையில், இந்தியா சர்வதேச அளவில் முக்கியமான நாடாகும். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாடாகும். இந்தியா எங்களுக்கு உரத்த குரலில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது உக்ரைனில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.பிரதமர் நரேந்திர மோடிஜி சக்தி வாய்ந்த, உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் நிலையில் உள்ள தலைவர். இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் நல்லதொரு உறவு, நீண்ட கால உறவு உள்ளது. மோடிஜி மட்டும் புடினுடன் தொலைபேசியில் பேசி போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டால் நிச்சயம் புடின் கேட்பார்.

இந்தியா உக்ரைன் விவகாரத்தில் உலகத் தலைமையுடன் கூடிய தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். எங்களது பாதுகாப்பு மட்டுமல்லாமல் எங்களது நாட்டு மக்களின் பாதுகாப்பும் இதில் அடங்கியுள்ளது. இந்தியாவின் தலையீட்டை நாங்கள் விரும்புகிறோம், கேட்டுக் கொள்கிறோம். உக்ரைனில் 15,000க்கும் மேற்பட்ட இந்தியர்களும் வசிக்கிறார்கள். அவர்களது பாதுகாப்பும் முக்கியமாகும்.

எனது இளம் மாணவர் பருவத்திலிருந்தே இந்தியாவை நான் அறிவேன். பேச்சுவார்த்தைகளிலும், சமரசம் மேற்கொள்வதிலும் இந்தியா திறமையான அனுபவம் வாய்ந்த நாடு. சாணக்கியர் இருந்துள்ளார். நாகரீகங்கள் உருவாகாத காலத்திலேயே இந்தியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நல்ல போக்குவரத்து இருந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad