ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகளை குறிவைக்கும் ரஷ்யா... Ukraine-இன் நிலை என்ன?
33333333333333333333333333333333333333333333333333333333333
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஒருபுறம் உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மறுபுறம் சைபர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனில் ஆயிரக்கணக்கிலான கணினிகளை குறிவைத்து தீங்கிழைக்கும் மென்பொருள் ஒன்று வெளிவந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் பல்முனை தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எல்லை வழியாக ரஷ்யாவின் போர் டாங்குகள் உக்ரைனுக்குள் நுழைந்தன. வான்வழி, கடல் வழி, தரை வழியாக உக்கிரமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஒருபுறம் இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீது சைபர் தாக்குதல்களையும் ரஷ்யா தொடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருள்கள் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.இன்னும் சில மணி நேரங்களில் ரஷ்ய படைகள் கீவ் நகரை கைப்பற்றும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் அரசின் இணையதளங்கள் ரஷ்ய சைபர் படையால் முடக்கப்பட்டு இணையதள தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளது.இணைய பாதுகாப்பு நிறுவனமான ESTE இன் கூற்றுப்படி, "இந்த மென்பொருள் உக்ரைனில் பல கணினிகளைத் தாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இயந்திரங்களில் டேட்டா அழிக்கும் திட்டத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளது," என அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment