இந்தியாவில் ரூ. 135 கோடி கிரிப்டோ மோசடி செய்ததற்கான 7 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் நிதுத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி பணமோசடிக்காக பயன்படுத்தப்பட்டதாகக் தொடர்ந்த ஏழு வழக்குகளை அமலாக்க இயக்குனரகம் (Enforcement Directorate) விசாரித்து வருவதாகவும், இதுவரை ரூ.135 கோடி மதிப்பிலான பணத்தை குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்டு அந்த வருமானத்தை கிரிப்டோவுடன் இணைத்துள்ளதாகவும் மார்ச் 14 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இயக்குநரகம் தெரிவித்த அறிக்கைகளின்படி சட்ட விரோதமாக ஈட்டிய வருமானங்களை மெய்நிகர் நாணயத்தின் மூலம் வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியதாகவும் மேலும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த வழக்குகளை விசாரித்து வருவதாகவும் மக்களவைக் கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் (Minister of State for Finance) பங்கஜ் சவுத்ரி (Pankaj Chaudhary) எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
மேலும் இந்திய அமலாக்க இயக்குநரகம் கிரிப்டோகரன்சி பண மோசடி சம்பந்தப்பட்ட வழக்குகளை பணத்தடுப்புச் சட்டம் 2022 (Prevention of Money Laundering Act, 2002) கீழ் வழக்கு தொடக்கப்பட்டு விசாரித்து வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment