மாணவிகளுடன் ஓட்டம் பிடித்த சேலத்தைச் சேர்ந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தபோது சிலுமிஷங்களில் ஈடுபட்டு கடந்த 2019 இல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரது சொந்த ஊரிலேயே கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். அங்கும் உள்ளூர் மக்களிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்து அந்த வழக்கில் தலைமறையாகி கோவை சரவணம்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு வீடு வாடகை எடுத்து தனியாக தங்கி வந்தார்.
மேலும், சரவணம்பட்டியில் உள்ள பள்ளியில் நடன ஆசிரியராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கணித பாடத்துக்கு டியூஷன் எடுத்து வந்த நிலையில் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி தன்னுடன் அழைத்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.
அங்கு சுசீந்திரம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து கணவன் மனைவியாக வசித்துள்ளனர். இந்நிலையில் வீட்டின் உரிமையாளரின் 19 வயதான பெண்ணையும் காதல் வலையில் வீழ்த்திய மணிமாறன் அவரையும் அழைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மணிமாறனை கோவை மற்றும் குமரி போலீசார் தேடி வந்த நிலையில், கன்னியாகுமரி பெண் தனது தோழிக்கு அண்மையில் போன் செய்து, தன்னை ஆந்திராவில் கடத்தி வைத்திருப்பதாக கூறி விவரத்தை விளக்கியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோருக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு கன்னியாகுமரி போலீசார் திருப்பதிக்கு சென்று பதுங்கியிருந்த மணிமாறனை கைது செய்து அழைத்து வந்தனர்.
No comments:
Post a Comment