கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில் நடைபெற்ற எருதாட்ட விழாவின்போது மாடு முட்டியதில் சதீஷ் என்ற 19 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில் இன்று எருதாட்ட விழா நடைபெற்றது. இதில் அஞ்செட்டியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்நிலையில், இந்த எருதாட்ட விழாவில் ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா என்பவரது மகன் சதீஷ் (19) என்பவர் பங்கேற்றுள்ளார். எருதாட்ட விழாவின்போது கூட்டத்தில் சீறிப்பாய்ந்த மாடு ஒன்று வாலிபர் சதீசை முட்டி தூக்கி வீசியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த அஞ்செட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து உயிரிழந்த சதீஷின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எருதாட்ட விழாவில் மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment