திமுக முன்னாள் தலைவர் 'கலைஞா் கருணாநிதி அறக்கட்டளை' சாா்பில் 8 நபர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அந்த அறக்கட்டளை மூலம் கருணாநிதி தனது சொந்த உழைப்பில் அளித்த 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு அதன் மூலம் வரும் வட்டியை கொண்டு மாதந்தோறும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
2007-ம் ஆண்டு, ரூ.1 கோடி தென்னிந்திய புத்தக விற்பனையாளா்-பதிப்பாளா் சங்கத்துக்கு வழங்கப்படும் என கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு அது வழங்கப்பட்டது. மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு தற்போது உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்துக்கான வட்டி தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிதியை பெற வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரின் செலவுகளை தவிர்க்கும் வகையில் அஞ்சல் மூலம் டிடி அனுப்பப்படுகிறது.
அதன்படி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துராணி மற்றும் மகாலிங்கம், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்திராணி மற்று கமலா, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேக்முகம்மது, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஆரிப்சேட், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணுகுமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராஜ் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 லட்சம் ரூபாயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் அறக்கட்டளை சார்பில் இதுவரை 5 கோடிக்கும் அதிகமாக உதவித்தொகை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment