தற்போது காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருக்கும் தகலல் ஒன்று மதுப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மதுபான வகைகள் தயாரிப்பில் எத்தனால் என்ற வேதிப்பொருள் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையில் எத்தனால் தயாரிக்கும் நிறுவனங்கள் கரும்பு , சோளம் ஆகியவற்றில் இருந்து அதனை தயாரித்து மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றன.
தற்போது இலங்கையில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. அத்துடன் எரிப்பொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எத்தனால் உற்பத்தி செய்ய கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதால் அதன் உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு எத்தனால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வரும் 22 ஆம் தேதி முதல் மதுபான உற்பத்தியை நிறுத்துவதை விட தங்களுக்கு வேறு வழியில்லை என்று நாட்டின் முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கலால் துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவிவரும் இத்தகவல் மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 2020 ஜனவரி முதல் எத்தனால் இறக்குமதியை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment