அரசு பள்ளி வகுப்பறையில் ஐந்தாம் வகுப்பு சிறுமியை அடித்து உதைத்த மற்றொரு சிறுமியின் தாய் மீது வழக்கு பதிவு
காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் இடையே சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவி தன் தாய் மேகலாவிடம் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து புகார் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மேகலா மாலை பள்ளி வகுப்பிற்கு வந்து சம்பந்தப்பட்ட சிறுமியை தலைமை ஆசிரியர் முன்னிலையில் அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார்.
மேகலாவிடம் தலைமையாசிரியர் எவ்வளவு எடுத்துக்கூறியும் மீண்டும் அச்சிறுமியை கடுமையான முறையில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் பயந்துபோன தலைமை ஆசிரியர் மற்றொரு நபர் உதவியுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்கு சென்ற சிறுமி உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தினால் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை தாக்கிய மேகலா
பின்னர் நடந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கவிதா தன் மகள் கடுமையாக தாக்கப்பட்டது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் மகளை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தது குறித்து மேகலா மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரை விசாரித்த காவல்துறையினர் சிறுமியை கண்மூடித்தனமாக அடித்த மேகலா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறியதாவது;
மாலை பள்ளி விட்டு வெளியே சென்ற பிறகு சாலையில் வைத்து தான் பிரச்சனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
No comments:
Post a Comment