விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து 3 வயது சிறுமி மரணம்... கள்ளக்குறிச்சியில் சோகம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 19, 2022

விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து 3 வயது சிறுமி மரணம்... கள்ளக்குறிச்சியில் சோகம்

சங்கராபுரம் அருகே உள்ள தனது வீட்டின் முன் கிடந்த குளிர்பானத்தை குடித்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சோகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய தாய் லட்சுமி. சத்யராஜுக்கு 3 வயதில் ரச்சனா என்ற மகள் இருந்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை ரச்சனாவும், தாய் லட்சுமியும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு எதிரில் கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருவரையும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, சிறுமியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக புறப்பட்டனர். செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

மேலும், சத்யராஜின் தாய் லட்சுமி மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து இவர்களுடைய வீட்டின் முன் விஷம் கலந்த குளிர்பானத்தை வீசிச் சென்றது யார் என்று வடபொண்பரப்பி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது வீட்டின் எதிரில் கிடந்த குளிர்பானத்தை குடித்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad