இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணை மசாஜ் செய்வதாக கூறி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தமது குடும்பத்துடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். டெல்லியை சுற்றி பார்த்துவிட்டு ஜெய்ப்பூருக்கு வந்த அவர், அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்துள்ளார்.
அப்போது அவர், ஆயுர்வேத மசாஜ் செய்ய விரும்பி, அங்கு பிரபலமான ஒரு ஆயுர்வேத மசாஜ் சென்டரை செல்ஃபோனில் தொடர்பு கொண்டுள்ளார். அவரது அழைப்பை ஏற்று அவரது அறைக்கு வந்த கேரளாவை சேர்ந்த பிஜூ முரளிதரன் என்பவர் அந்த பெண்ணுக்கு மசாஜ் செய்துள்ளார்.
அப்போது மஜாவான அவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி நெதர்லாந்தை சேர்ந்த அந்த பெண் ஜெய்ப்பூர் போலீசில் புகார் அளித்தார்.
அவர அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த செய்தனர். அதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து மசாஜ் என்ற பெயரில். சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்கராம் செய்த பிஜூ முரளிதரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment