புதுக்கோட்டையில் தாயை கொன்ற மகனுக்கு நாற்பது ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மருதந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை அடித்து மண்ணெணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்று விட்டார்.
இந்நிலையில், சந்தோஷ்குமாரை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பெற்ற தாய் என்றும் பாராமல் குடிக்க பணம் தராததால் எரித்து கொன்ற வழக்கில் சந்தோஷ்குமாருக்கு 40 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அளித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.
மேலும், செய்த தவறை உணரும் வகையில் முதல் மூன்று மாதங்களுக்கு சந்தோஷ் குமாரை தனிமை சிறையில் அடைக்கவும் நீதிபதி
No comments:
Post a Comment