கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து 4 இளம்பெண்கள் தற்கொலை..! பரபரக்கும் க்ரைம் சீன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 27, 2022

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து 4 இளம்பெண்கள் தற்கொலை..! பரபரக்கும் க்ரைம் சீன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள்: விசாரணையை நோக்கி நகரும் வழக்குகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வாசவி நகரை சேர்ந்தவர் கோபி. இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வைஷ்ணவி (24). இவருக்கு கடந்த 24ம் தேதி பிறந்த நாளாகும். அன்று மாலை, கோபி வீட்டிற்கு வந்த போது, வைஷ்ணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வைஷ்ணவியின் தந்தை ஓசூர் டவுன் போலீல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே அமலட்டியை சேர்ந்தவர் நவீன்குமார். இவருக்கும், ஓசூர் ஆர்.கே.அட்கோ பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகள் சவுமியா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்குள் குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமான 10 மாதத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்தங்கரை அருகே உள்ள அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி லட்சுமி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். லட்சுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 6 ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
அதேபோல், ஊத்தங்கரை அருகே உள்ள மாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி (40). இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கலைவாணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad