மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்டை நாடான சீனாவில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கோவிட் - 19 எனப்படும் கொரோனா தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்து விட்டது.
இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதற்கிடையே கொரோனா பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக ஜிலின், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சில நாட்களாக ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சுமார் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 23 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்பது போன்ற பல்வேறு தளர்வுகளை, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்தார். மேலும் கொரோனா தொற்றுடன் பொது மக்கள் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது, நெதர்லாந்து சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதை அடுத்து ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, பிரதமர் மார்க் ரூட்டேவுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைவில் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment