இதை கவனிங்க!! வரி சேமிப்புகான டாப் 5 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 6, 2022

இதை கவனிங்க!! வரி சேமிப்புகான டாப் 5 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்!!

வரி சேமிப்பு ஃபண்டான ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் (Equity Linked Saving Scheme) முக்கியத்துவம் பற்றி காண்போம். அதில் டாப் 5 ஃபண்டுகளைப் பற்றி இதில் காண்போம்
ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் (ELLS) என்பது ஒரு திறந்தநிலை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இது முதன்மையாக ஈக்விட்டிகள் மற்றும் ஈக்விட்டி தொடர்பான தயாரிப்புகளில் முதலீடு செய்யப்படுகிறது. அதனால் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளுக்காக இந்த வகை மியூச்சுவல் ஃபண்டுகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் வரித் திட்டமிடுதல் என்பது தனி நபருக்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். பெரும்பாலானோர் அதில் குறைந்த அளவு மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். குறிப்பிட்ட சிலர் மட்டுமே வரித் திட்டமிடுதலை முழுமையாக தங்களை ஈடுபடுத்துக் கொள்கின்றனர்.

அப்படி வரித் திட்டமிடுதலில் இந்த ELLS மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக முக்கியத்துவம் பெருகின்றன. பெரும்பாலான மக்கள் இதனை வரியை சேமிக்கும் ஒரு திட்டமாகவே பார்க்கின்றனர்.

மேலும் இந்த ELLS வரி சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால கட்டாயமாக அந்த முதலீடு செய்யப்படும் பணம் அதன் லாக் – இன் காலமாக 3 ஆண்டுகள் வரை அத்திட்டத்தில் இருக்கும். அதன் லாக் – இன் காலம் முடியும் வரை முதலீட்டாளர்கள் அவர்களின் பணத்தை எடுக்க முடியாது.
லாக் – இன் காலம் முடிந்தவுடன் அவற்றை விற்கலாம் அல்லது மறுபடியும் அதனைத் தொடரலாம். ஆனால் பெரும்பாலானோர் அவற்றை விற்பதிலேயே முனைப்பாக உள்ளனர்.

வரி சேமிப்பிற்கான டாப் 5 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்:

1. குவாண்ட் டேக்ஸ் பிளான் (Quant Tax Plan Direct-Growth – 5 ஸ்டார்)
2. பிஓஐ ஏஎக்ஸ்ஏ டேக்ஸ் அட்வாண்டேஜ் (BOI AXA Tax Advantage Direct-Growth – 5 ஸ்டார்)
3. மீரா அசெட் டேகஸ் சேவர் ஃபண்ட் (Mirae Asset Tax Saver Fund Direct-Growth – 5 ஸ்டார்)
4. கனரா ரோபேக்கோ ஈக்விட்டு டேக்ஸ் சேவர் (Canara Robeco Equity Tax Saver Direct- Growth – 4 ஸ்டார்)
5. ஐடிஎஃப்சி டேக்ஸ் அட்வாண்டேஜ் (IDFC Tax Advantage (ELSS) Direct Plan-Growth – 4 ஸ்டார்)

No comments:

Post a Comment

Post Top Ad