பொது போக்குவரத்தில் ரயில்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனை கருத்தில்கொண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
இதன்படி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 11) முதல் வாரந்தோறும் கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி ரயில் புறப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எதிர்திசையில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ஞாயிற்றுகிழமையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோட்டை ரயில் நிலையம் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் 530 பேர் பயணிக்க முடியும் என்பதும், டீசல் தட்டுப்பாட்டால் இலங்கையிவ் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய ரயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment