கிரெடிட் ஸ்கோர் டாப்ல போணுமா?.. இத பலோ பண்ணுங்க!!... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 6, 2022

கிரெடிட் ஸ்கோர் டாப்ல போணுமா?.. இத பலோ பண்ணுங்க!!...

ஒருவருடைய கடன் மதிப்பு 750 க்கு மேல் இருந்தால் நீங்கள் நல்ல கடன் மதிப்பெண் உடையவராக கருத்தப்படுவீர்கள். பெரும்பாலும் 750க்கும் குறைவாக ஸ்கோர் வைத்துள்ளவர்கள் கடன் பெறுவது எளிதல்ல.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன என்பது தெரியாத சிலர் அது குறித்த முக்கியத்துவம் அறியாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் கடன் பெரும் சாதாரண மனிதர் ஒருவர், ஒரு கடன் பெற்று திருப்பி செலுத்துதல் சரியாக இல்லாமல் அவர்கள் சிபில் ஸ்கோரை குறைத்து, மற்ற கடன் வாங்குவதற்கு வழியில்லாமல் போய் விடுகிறது.
ஒவ்வொருவரும் தங்கள் வாங்கும் வாகனத்திற்கோ அல்லது வீட்டுக்கோ நீங்கள் செலுத்தும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அடிப்படையிலும் உங்களுக்கான கிரெட் ஸ்கோர் தீர்மானிக்கப்படுகிறது.

பொதுவாக, டிரான்ஸ் யூனியன் சிபில், சிஆர்ஐஎஃப் ஹை மார், எக்ஸ்பீரியன், ஈக்யூபாஸ் போன்ற அமைப்புகள் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறித்து தீர்மானிக்கின்றன. அதில் வங்கிகள் மற்றும் நிதிசார்ந்த நிறுவனங்கள் கொடுக்கும் ஆவணங்களை வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை 300 முதல் 900 வரையிலான புள்ளிகளில் கணக்கிடப்படுகிறது. அதில் 750 க்கு மேல் இருந்தால் நல்ல ஸ்கோராகவும், 600க்கும் குறைந்த ஸ்கோர் மோசமாக ஸ்கோராகவும் கணக்கிடப்படுகிறது. இதனால் மறுபடியும் கடன் பெற விரும்புபவர்கள் கடன் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.
கிரெடிட் ஸ்கோர் எப்படி அதிகமாகிறது

கடன் பெற்றவர்கள் தங்களின் மாத இஎம்ஐ தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும், கிரெடிட் கார்டு பில், தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள் போன்றவற்றை ஒவ்வொரு மாதமும் தவறாமல் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் செலுத்திவிட வேண்டும். அதற்காக, இசிஎஸ், இதர ஆட்டோ டெபிட் முறைகளை கடைப்பிடிக்கலாம்.

கிரெடிட் யுடிலைசேஷன் எப்படி இருக்க வேண்டும்

கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கிரெடிட் யுடிலைசேஷன் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். கிரெடிட் கார்டில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள லிமிட் தொகையை முழுவதுமாக உபயோகிக்காமல் 30 சதவீதம் மீதம் வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும்
பழைய கார்டுகள், அக்கவுண்ட்டுகள் உபயோகிக்கவும்

நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய இயக்கத்தில் இல்லாத பழைய அக்கவுண்ட் மற்றும் கிரெடிட் கார்டுகளை முடித்து கொள்ளாமல், குறைந்தபட்ச வரவு, செலவில் அதை கடைப்பிடிப்பதால், கிரெடிட் ஸ்கோர் உயரும்.

கிரெடிட் ஸ்கோரை பார்வையிடவும்

கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு உள்ளது என்பதை நீங்கள் செக் செய்து கொள்ள வேண்டும். இதனால் பெரிதாக ஸ்கோர் பாதிப்பதை தடுக்கலாம். அதேபோல், தவறாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் வங்கியிடம் அதுகுறித்து முறையிடலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad