555555555555555555
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (21) கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியுடன் திருச்செங்கோடு கோயிலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். பின்னர் மறுநாள் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டும், நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இந்நிலையில் ஜூன் 23 ஆம் தேதி சம்பவத்தன்று கோகுல்ராஜியிடம் கோயிலில் பேசிக்கொண்டிருந்த பெண் பேசிய வீடியோ வழக்கை சூடு பிடிக்க வைத்தது. அந்த வீடியோவில், நானும் கோகுல்ராஜும் காதலர்கள் இல்லை. வெறும் நண்பர்கள் மட்டுமே. கோகுலை கடத்தி சென்றவர்கள் காரில் ' தீரன் சின்னமலை பேரவை' என எழுதியிருந்தது' என கூறினார். பிறகுதான், கோகுலராஜை கடத்தியது தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் என்பது உறுதியானது.
இந்த வழக்கில், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் வழக்கில் தொடர்புடைய ஜோதிமணி என்ற பெண் இறந்துவிட்டார். நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு கோகுல்ராஜ் தாய் தாக்கல் செய்த மனு மூலம் மதுரை வன்கொடுமை தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
5555555555555555555555555
கடந்த 2 வருடங்களாக நடந்து வந்த வழக்கில் '' அரசு தரப்பில் 106 சாட்சியம் மற்றும் நீதிமன்ற தரப்பில் இரு சாட்சியங்கள் என 108சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்துள்ள நிலையில் அதில் சிசிடிவி உட்பட 100க்கும் மேற்பட்ட ஆவண பொருட்கள் சமர்பிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று வழக்கை முடித்து வைத்த நீதிபதி சம்பத்குமார் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என அறிவித்தார்.
5555555555555555
மேலும், வரும் 8ஆம் தீர்ப்பின் விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார். இந்நிலையில், கோகுல்ராஜின் படுகொலை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அவரது தாயார் சித்ரா கூறுகையில், 10 பேரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்புக்காகத்தான் உயிரோடு காத்திருந்தேன்.10 பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்'' என இவ்வாறு அவர் கண்ணீர்மல்க பேசினார்.
No comments:
Post a Comment