விருதுநகர் பாலியல் வழக்கு: கைதான 8 பேர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 26, 2022

விருதுநகர் பாலியல் வழக்கு: கைதான 8 பேர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை..!

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் கைதான எட்டு பேர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை
விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை காதலிப்பதாக நடித்து உறவு வைத்துக்கொண்டு அந்த வீடியோவை நண்பர்களுக்கும் பகிர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினின் உத்தரவையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் சென்றுள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் பாலியல் வன்கொடுமை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்றையை தினம்

விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணன், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான டிஎஸ்பி வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்தனர்.
கைதான 8 பேரை தவிர வேறு யாராவது உள்ளார்களா என்பதையும் போலீசார் கேட்டறிந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸ் இன்று சோதனை தொடங்கினர். பெற்றோர்களிடம் விசாரனை நடத்தும் நிலையில் கைதானவர்களின் லேப்டாப் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad