பிரதமர் நிதி உதவி.. உங்களுக்கு வேணுமா?; வங்கி கணக்குடன் ஆதாரை இணையுங்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 26, 2022

பிரதமர் நிதி உதவி.. உங்களுக்கு வேணுமா?; வங்கி கணக்குடன் ஆதாரை இணையுங்கள்!

பிரதமர் நிதி உதவி பெற வேண்டுமா? உடனே வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலம் இருக்கும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்க மற்றும் இதர வேளாண் பணிகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1,82,811 விவசாயிகள் இதுவரையிலும் பயன் அடைந்து வருகின்றனர். அதே சமயம் விவசாயிகள் வரும் ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022 வரை காலத்திற்கான 11வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயம் ஆகும்.

மத்திய அரசு தற்போது பி.எம் கிசான் திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்பட இருக்கிறது.
தற்போது விவசாயிகள் 11வது தவணை தொகை (01.04.2022 முதல் 31.07.2022 வரை) பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைப்பது கட்டாயம் ஆகும்.

எனவே விவசாயிகள் உடனடியாக தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் சென்று வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை உடனே இணைத்துக்கொள்ள வேண்டும்.

இதுவரையிலும் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள இ சேவை மையங்கள் மூலம் பி.எம் கிசான் திட்ட வலைதளத்தில் உங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து உங்களது விரல் ரேகையை பதிவு செய்து விவரங்களை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதார் எண்கள் மற்றும் வங்கிக்கணக்குகளை அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வங்கிகளுக்கு நேரில் சென்று வரும் மே மாத இறுதிக்குள் பதிவு செய்து தொடர்ந்து இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும். இவ்வாறு கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad