என்னப்பா நடக்குது பங்குச் சந்தைல!.. ஏறுது, இறங்குது!!. முதலீட்டாளர்கள் குழப்பம்!. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 25, 2022

என்னப்பா நடக்குது பங்குச் சந்தைல!.. ஏறுது, இறங்குது!!. முதலீட்டாளர்கள் குழப்பம்!.

பங்கு சந்தை இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று நிஃப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் சற்று சரிவிலேயே ஆரமபமாகின.

நேற்றை அமர்வில் அமெரிக்க பங்கு சந்தை சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. மறுபுறம் இன்று ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. அதன் தாக்கம் இந்திய பங்கு சந்தையும் சற்று சரிவிலேயே வர்த்தகமாகிறது. இந்த நிலையில், இன்று வாரத்தின் கடைசி நாள் என்பதால், பங்குச் சந்தையில் பிராபிட் புக்கிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பங்குச் சந்தை இன்று

இன்று ப்ரீ ஓபனிங்க் சந்தை தடுமாற்றத்தில் காணப்பட்டது. ஆரம்பத்தில் சென்செக்ஸ் 188.51 புள்ளிகள் குறைந்து, 57,784.49 புள்ளிகளாகவும், நிஃப்டி 46.70 புள்ளிகள் குறைந்து, 17,269.50 புள்ளிகளாகவும் தொடங்கியது.

பங்குச் சந்தை குறியீடுகள்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. மற்றவை பெரியளவில் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றன.
நிஃப்டி, சென்செக்ஸ் குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லாபம் ஈட்டியவர்களாகவும், மறுபுறம் டைட்டன் நிறுவனம், டாடா கன்சியூமர் புராடக்ஸ், மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் நஷ்டமடைந்தவர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ், கோடக் மஹிந்திரா டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லாபத்திலும், டைட்டன் நிறுவனம், மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே உள்ளிட்ட பங்குகள் டாப் நஷ்டத்திலும் உள்ளன.
இந்த நேர நிகழ்வு
தற்போது 11 மணி நிலவரப்படி, பங்குச் சந்தை தொடக்கத்தில் சரிவில் தொடங்கி சற்று ஏற்றத்துக்கு பிறகு மீண்டும் சரிந்தது. அதன்படி, சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிந்து, 57,482 புள்ளிகளாகவும், மறுபுறம் நிஃப்டி 34 புள்ளிகள் சரிந்து, 17,190 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad