கடுமையாகும் கிரிப்டோ வரிகள்!! இறுதிகட்ட ஆலோசனையில் மத்திய அரசு!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 25, 2022

கடுமையாகும் கிரிப்டோ வரிகள்!! இறுதிகட்ட ஆலோசனையில் மத்திய அரசு!!

இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கான வரிகளை கடுமையாக்குவதற்கான வழிகளை ஆலோசித்து வருவதாக அரசு அறிவிப்பு.

மார்ச் 24 அன்று கிரிப்டோகரன்சிகளின் மீதான வரிவிதிப்புக்கான விதிமுறைகளை கடுமையாக்க போவதாக அரசாங்கம் மக்களவையில் முன்மொழிந்ததுள்ளது. மற்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளின் (VDA) ஆதாயங்கள் மூலம் ஏற்படும் இழப்புகளை நிறுத்த அனுமதித்துள்ளது.
நிதி மசோதா, 2022-ன் திருத்தங்களின்படி, மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வது தொடர்பான பிரிவில் இருந்து ‘மற்றவை’ என்ற வார்த்தையை நீக்க அமைச்சகம் முன்மொழிகிறது என்று மக்களவை உறுப்பினர்களிடையே அறிக்கை வெளியிடப்பட்டது.

VDA (virtual digital assets) என்பது கிரிப்டோகரன்சிகள் மற்றும் NFT களாகும். விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதால் ஏற்படும் இழப்புகளை மற்றொருவரிடமிருந்து வரும் ஆதாயங்களுக்கு எதிராக அமைக்க முடியாது என்றும் கிரிப்டோ மைனிங் செலவுகளை வரி விலக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது என்றும் மார்ச் 21 அன்று மத்திய அரசு கூறியது.

பிப்ரவரி, 2022 அன்று மத்திய அரசு தாக்கல் செய்த மத்திய யூனியன் பட்ஜெட்டின்படி கிரிப்டோகரன்சி இந்திய வருமான வரிச் சட்டத்தின் கீழ் அதன் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் பரிசாக தரப்படும் ரூ.10,000 மேல் பெறப்படும் பரிசுகளுக்கு 1% TDS வரியானது விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நபர்கள்/ HUFகளுக்கு ரூ.50,000 ஆக இருந்தால் ஆண்டொன்றுக்கு 1% TDS விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 21 அன்று கிரிப்டோகரன்சிகளுக்கான 30% வரி வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

கிரிப்டோகரன்சிக்கான 1 சதவீத TDS தொடர்பான விதிமுறைகள் ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும், அதே நேரத்தில் ஆதாயங்களுக்கான 30% வரி ஏப்ரல் 1 முதல் வரி விதிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி (GST) சட்டத்தின் கீழ் கிரிப்டோகரன்சியை சரக்குகள் அல்லது சேவைகளுக்கு கீழ் வகைப்படுத்துவதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் கிரிப்டோகரன்சிகளின் முழுபரிவர்த்தனைகளுக்கும் வரி 0.5 முதல் 1% வரை ஜிஎஸ்டி (GST) வரி இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது, ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் அரசு வெளியிடவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad