நீங்கள் பைக் உள்ளவரா? இதை கவனமாக படியுங்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 25, 2022

நீங்கள் பைக் உள்ளவரா? இதை கவனமாக படியுங்கள்!

இந்தியாவில் கார் வைத்திருப்பவர்களை விட பைக் வைத்திருப்பவர்கள் மிகவும் அதிகம். இரண்டையும் சேர்த்து பார்த்தால் பைக் உள்ளவர்கள் பல மடங்கு அதிக உள்ளார்கள். இந்த பைக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தனக்கு பைக்கில் சில முக்கியமான விஷயங்களை செய்யவேண்டும். இவை பைக் மட்டுமல்லாமல் பைக் ஓட்டுனர்களுக்கு மிகவும் பாதுகாப்பை விஷயங்களாக பார்க்கப்படுகிறது. இவற்றை சரியாக பின்பற்றினால் தினசரி பைக் பயணம் சிறப்பானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். தற்போது இதன் விவரங்கள் இந்த பதிவில் காணலாம்.

இரு சக்கர வாகன சந்தை என்பது ஆசியாவில் மிக பெரிய சந்தை ஆகும். பல ஆசிய நட்டு மக்கள் தினசரி தேவைக்கு இரு சக்கர வாகனகளையே பயன்படுத்துகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் மிடில் கிளாஸ் உலகில் அதிகம் வசிக்கும் பகுதி ஆசியா ஆகும்.
இந்த ஆசியாவில் மிடில் கிளாஸ் மக்களால் கார்களை விட இரு சக்கர வாகனகளையே தங்களின் தினசரி தேவைக்கு வாங்கமுடியும். அந்த வகையில் உலகின் முதல் இரு சக்கர வாகனங்கள் சந்தை என்றால் அது இந்திய சந்தை என்றே கூறலாம்.
இங்கு இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் பலர் இன்னும் வாகனங்களை பயன்படுத்தும் விதம் குறித்து அறியாமல் உள்ளனர். இதனால் வருடம் தோறும் அதிக அளவு விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள். தற்போது இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை இந்த பட்டியலில் காணலாம்.
1.சீரான வேகத்தில் பயணம்
பொதுவாக பைக் வாங்கிய பலர் உணர்ச்சி மிகுதி மற்றும் மகிழ்ச்சை காரணமாக பைக்கை தாறுமாறாக ஓட்டுவார்கள் இதனால் அதிகளவு விபத்து ஏற்பட்டு சிக்கிக்கொள்கிறார்கள்.
பைக்கை எப்போது ஓட்டினாலும் சீரான வேகத்தில் ஓட்டவும். இப்படி செய்வதால் பைக் அதிக அழுத்தம் பெறாமல் சிறப்பாக இயங்கும். குறுகிய சாலைகளில் ஓட்டும்போது குறைவான வேகத்தில் ஓட்டுவது மிகவும் முக்கியம்.
சாலைகளில் அவ்வப்போது திடீரென்று மக்கள், வேறு பைக் ஓட்டிகள், விலங்குகள், கார்கள் போன்றவை கடப்பது இந்திய சாலைகளில் சாதாரண விஷயம். இப்படி எந்த ஒரு அறிவிப்பும் இன்றி கடக்கும் இது போன்ற விஷயங்களிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள குறுகிய சாலைகள் மற்றும் நகரங்களில் குறைவான வேகத்தில் பைக் ஓட்டுவது பாதுகாப்பானது.

2.வாகன இடைவெளி
முன்னாள் செல்லும் வாகங்களிடம் இருந்து குறைந்தது பத்து அடி தூரம் இடைவெளி விட்டு வாகனத்தை இயக்குவது பாதுகாப்பானது. ஏனென்றால் முன்னாள் செல்லும் வாகனம் ஒரு சரக்கு வாகனமாகவோ, பேருந்தோ அல்லது வேறு ஏதாவது நான்கு சக்கர வாகனமாகவோ இருந்தால் நமக்கு அதற்கு முன் நடக்கும் விஷயங்கள் தெரியாது.
மேலும் நமக்கு முன்னாள் செல்லும் வாழுங்கள் திடீரென்று பிரேக் போடும் பொது நாம் முன்னாள் செல்லும் வாகனத்தில் மோதும் அபாயமும் உள்ளது. இதனால் எப்போதும் சீரான இடைவெளியில் பைக்கை ஓட்டுவது நல்லது.

3.பைக்குகளின் கண்ணாடிகள்
பலர் பைக்குகள் கண்ணாடிகளை பைக் வாங்கியவுடன் கழற்றிவிடுவார்கள். அப்படி செய்வது நமது பாதுகாப்பிற்கு நாமே குறை வைப்பது போல ஆகும். பைக்குகளில் உள்ள கண்ணாடிகள் பின்பக்கம் வரும் வானங்களை பார்க்க உதவும்.
மேலும் பைக் கண்ணாடி இருப்பதால் நாம் திரும்பி பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படாது. அது நாம் திரும்பி பார்க்கும் நேரத்தை குறைக்கும். திரும்பி பார்க்கும் நேரம் குறைவு என்றாலும் ஒரு விபத்து ஏற்படுவதை தடுக்க அந்த சிறிய நேரமும் மிகவும் அவசியம். இதனால் பைக்குகளில் உள்ள கண்ணாடிகளை எப்போதும் கழற்றவேண்டாம்.

4.சாலைகளை கடக்கும்போது நிதானம்
நாம் ஒரு சாலையை விட்டு இன்னொரு சாலையை கடக்கும்போது பல விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் மக்களிடம் இல்லாத நிதானம் ஆகும்.
ஒரு சாலையிலிருந்து இன்னொரு சாலையை கடக்கும் நேரத்தில் எவ்வளவு பெரிய வேலை இருந்தாலும் நிதானத்தை இழக்காதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள். தூரத்தில் வாகனங்களை பார்க்கும்போது நிதானமாகவருவது போல இருக்கும். ஆனால் அவை மிகவும் அதிவேகத்தில் வந்துகொண்டிருக்கும்.

இதனால் நமக்கு மட்டுமல்லாமல் எதிர் வாகனத்திற்கு பாதிப்பு ஏற்படும். எப்போதும் சாலைகளை கடக்கும் நேரத்தில் பொறுமையோடு கடக்க முயலுங்கள்.

5.இண்டிகேட்டர் பயன்படுத்துவது நல்லது.
நாம் ஒரு திசையில் செல்லும்போது பகலோ இரவோ கைகளையோ அல்லது இண்டிகேட்டர்களை பயன்படுத்தி மற்ற வாகனங்களுக்கு நாம் எந்த திசையில் செல்ல இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்துங்கள். பலர் இண்டிகேட்டர் உபயோகப்படுத்தவதே இல்லை.
எதிர் ரோடுகளில் தவறாக பயணிக்கும்போதுகூட இண்டிகேட்டர் பயன்படுத்தவேண்டும். எதிர்வரும் வாகனங்களுக்கு உங்கள் ஹெட் லேம்ப் வெளிச்சத்தில் எதுவும் தெரியாது. ஆனால் இந்த இண்டிகேட்டர் வெளிச்சம் நன்றாக தெரியும். எப்போதும் அதனை பயன்படுத்துங்கள்.

6.ஹெட் லேம்ப் பயன்பாடு
பைக்குகளில் உள்ள ஹெட் லேம்ப் ஹை பீம் லோ பீம் என்று இரண்டு வகைகளில் இருக்கும். எப்போதும் லோ பீம் கொண்டு பைக்குகளை ஓட்டுவது சிறந்தது. ஏனென்றால் ஹை பீம் வெளிச்சம் நமக்கு நன்றாக தெரிந்தாலும் எதிர்வரும் வாகங்களுக்கு அந்த வெளிச்சத்தினால் முன்பக்கம் சரியாக தெரியாது.
இதனால் வித்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எப்போதும் பைக்குகளை Low Beam கொண்டு ஓட்டுவது சிறந்தது. தேவை ஏற்பட்டால் மட்டும் High Beam பயன்படுத்தவும்.
7.கண்கவரும் ரிப்ளக்டர்கள்
பைக்குகளில் ஸ்டைல் மாற்றம் என்ற பெயரில் பலர் கண்கவரும் ரிப்ளக்டர்கள் மாறும் லைட்களை பயன்படுத்துகின்றனர். இந்த லைட்கள் எதிர் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கூசும் வகையில் இருந்தால் விபத்து ஏற்படவாய்ப்புள்ளது. இதனால் இந்த வகை லைட்கள் மற்றும் ரிப்ளக்டர்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment

Post Top Ad