மயிலாடுதுறையில் பட்ட பகலில் மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.
மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கௌரி (60). இவர் கடந்த மார்ச் 20ம் தேதி அன்று பூஜைக்கு பூ வாங்கிக்கொண்டு ரெட்டை தெருவில் வந்துகொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரில் ஒருவர் கௌரியை நோக்கி நடந்து சென்று அந்த பாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பொருட்க முயற்சித்துள்ளார்.
கௌரி எவ்வளவோ போராடியும் மர்ம நபர் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த கௌரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கௌரிக்கு தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர்.
பின்னர் மயிலாதுறை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். மூதாட்டியிடம் மர்ம நபர் செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வள்ளலார் கோவில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment