முகம் தெரியாத முகநூல் காதலி இறந்ததால் வாலிபர் தற்கொலை..! கள்ளக்குறிச்சி சோகம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 8, 2022

முகம் தெரியாத முகநூல் காதலி இறந்ததால் வாலிபர் தற்கொலை..! கள்ளக்குறிச்சி சோகம்

கள்ளக்குறிச்சி அருகே முகம் தெரியாத முகநூல் காதலி இறந்ததால் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வாலிபரின் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே சினிமா பட பாணியில் முகநூலில் மலர்ந்த காதல், இறுதிவரை காதலியின் முகம் பார்க்காமல் காதலித்து வந்த வாலிபர்; காதலி இதய நோயால் இறந்து விட்டார் என்று தெரிந்தவுடன் காதலனும் தற்கொலை செய்துகொண்ட சோகம்.
​இப்படியும் ஒரு காதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (26) 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு முகநூல் மூலமாக பூமிகா என்கிற பெண் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் முதலில் நண்பர்களாக பேசி வந்தள்ள நிலையில் பின்னர், அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. ஆனால், இருவரும் ஒருமுறை கூட நேரில் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், மணிகண்டன் பூமிகாவை ஆழமாக காதலித்து வந்துள்ளார். மேலும், பூமிகா இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தும் மணிகண்டன் வைத்திருந்த காதல் துளிக்கூட குறையவில்லை.

​பூமிகாவின் பாட்டி

இந்த நிலையில், சில நாட்களாக பூமிகாவிடம் இருந்து மணிகண்டனுக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் பூமிகாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர் பரிதவித்து போயுள்ளார். தொடர்ந்து பூமிகாவின் செல்போனுக்கு அவர் தொடர்பு கொண்ட நிலையிலேயே இருந்துள்ளார். அதில், சில தினங்களுக்கு முன்பு பூமிகாவின் பாட்டி செல்போனை எடுத்து பேசியதாக சொல்லப்படுகிறது.

​காதலி இறப்பு செய்தி
அவரிடம் பூமிகா குறித்து மணிகண்டன் கேட்டுள்ளார். அப்போது அவர், சில நாட்களுக்கு முன்புதான் இதய நோய் பாதிப்பு காரணமாக பூமிகா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் மணிகண்டனுக்கு பேரிடியை கொடுத்துள்ளது. அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார். இதய நோயால் காதலி சென்ற இடத்துக்கே சென்று விடலாம் என்கிற முடிவுக்கு மணிகண்டன் வந்தார். இறுதியாக, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

​தற்கொலை முடிவுக்கான காரணம்

சிகிச்சையில் இருந்த அவரிடம், குடும்பத்தினர் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து கேட்டனர். அப்போது அவர், தான் பூமிகா என்கிற பெண்ணை காதலித்ததாகவும், அவர் இறந்து விட்டதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இந்நிலையில் அவரது நிலை மோசமானதால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
​வழக்குப்பதிவு

இதுகுறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி எந்த ஊரை சேர்ந்தவர் என்கிற முழு விவரமும், நேரில் கூட அவரது முகம் பார்த்திராத நிலையில், அந்த பெண்ணுக்காக தனது உயிரை மணிகண்டன் மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad