தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?
அண்டை மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்று இன்னும் வீரியத்தோடு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம், கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம், 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில், பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், பொது மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 50,000 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தவறாமல் இன்றைய தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தொகுதி பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் நகரில், கொரோனா தடுப்பூசி முகாமை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
கொரோனா தொற்று குறைந்தாலும் மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவில் தடுப்பூசி போட வேண்டும். கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், அண்டை நாடுகளிலும் தொற்று வீரியத்துடன் தான் இருக்கிறது.
அதே சமயம் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜிய நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உக்ரைன் நாட்டிலிருந்து 1,890 மாணவர்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்; இதில், 1,524 மாணவர்கள் தமிழக அரசின் செலவிலும், 366 மாணவர்கள் அவர்களின் சொந்த செலவிலும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும், அண்டை நாடான, சீனாவின் சாங்சுன் நகரில், புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இதன் காரணமாக, சாங்சுன் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்று, தமிழகத்திற்கு பரவும் பட்சத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment