பேய் ஓட்டுவதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளியிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தப்பிக்க விட்ட பெண்ணாடம் காவல்துறையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. அந்த பள்ளிவாசலில் அப்துல் ஹனி (54) என்பவர் பில்லி சூனியம் ஏவல், பேய் போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் நிபுணர் என கூறிக்கொண்டு அப்பகுதியில் பல வருடங்களாக பொதுமக்களை ஏமாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் இரண்டு நாட்களாக யாரிடமும் பேசாமல் சுயநினைவு இன்றி மன அழுத்தத்தில் இருந்து வந்த நிலையில் 20.03.2022 அவருடைய கணவர் பெண்ணாடம் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அப்துல் ஹனி 22 வயது அப்பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது பேய் ஓட்ட வேண்டும் என்று கூறி பள்ளிவாசல் அருகே உள்ள அறைக்கு கூட்டி சென்று கதவை மூடி அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் அலரும் சத்தம் கேட்டு அவருடைய கணவன் ஜன்னல் வழியாக பார்த்த போது அப்துல் ஹனி பாலியல் சீண்டல் செய்ததைப் பார்த்து அவரது கணவரும் சத்தம் போட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்று பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினரின் சிறப்பு விசாரணையில் அப்துல் ஹனி அந்த பெண்ணிடம் தவறாக நடந்தது கொண்டதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேய் ஓட்டும் நிபுணராக சொல்லிக் கொள்ளும் அப்துல் ஹனி தான் செய்தது தவறு என்றும் இந்த வழக்கு பெரிதானால் தனது பேய் ஓட்டும் பிசினஸ் கெட்டுவிடும் மேலும் இதுநாள் வரை தான் நல்லவர் என்று நம்பி பல பெண்கள் தன்னிடம் பேய் ஓட்ட வந்த நிலையில் இந்த காரியம் வெளியில் தெரிந்தால் யாரும் நான் பேய் ஓட்டுவதாக நம்பி வரமாட்டார்கள் என்று கதறி அழுததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் காவல்துறையினர் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனக்கே உரிய பாணியில் இரு தரப்பையும் சமாதானம் செய்வது போல் பேசி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் எதுவும் நடக்கவில்லை என கையெழுத்து பெற்றதாக சொல்லப்படுகிறது. இதற்காக காவல்துறையினருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் அப்துல்கனி பல லட்சங்களை வாரி இறைத்து உள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பார்த்ததால் மட்டுமே இந்த பிரச்சனை வெளியே வந்துள்ளது. ஆனால் சுயநினைவின்றி பேய் பிடித்ததாக கூறி பேய் ஓட்டுவதற்காக அப்துல் ஹனியிடம் வந்த எத்தனை பெண்கள் சுயநினைவின்றி இருக்கும் பொழுது இது போன்று பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பார்கள் என அந்த அல்லாஹ்வுக்குத் தான் தெரியும் என்றும் தற்பொழுது நீதி வென்றது, ஞாயம் வென்றது எனக் கூறிக்கொள்ளும் அப்துல் ஹனியிடம் இன்னும் எத்தனை பேர் சிக்கி சீரழியும் நிலை வரும்? என அப்பகுதி வாசிகள் கவலையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் காவல்துறையினரின் இந்த செயலை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அங்கீகரிபாரா? அல்லது உரிய விசாரணை நடத்தி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்களாம்.
No comments:
Post a Comment