முக்கிய ரயில்கள் திடீர் ரத்து; தெற்கு ரயில்வே அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 15, 2022

முக்கிய ரயில்கள் திடீர் ரத்து; தெற்கு ரயில்வே அதிரடி!

முக்கிய ரயில்களை திடீரென ரத்து செய்து தெற்கு ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து 2021-22ம் கல்வி ஆண்டு முன்னிட்டு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடத்தப்பட்டன. இதற்கிடையே உருமாறிய கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் பரவல் தீவிரம் அடைந்தது.

இதன் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் கடந்த டிசம்பர் 24ம் தேதியும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளில் கடந்த மாதம் 13ம் தேதியும் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது.
மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் அடைப்பு என திடீர் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா நோய் பரவல் ஒரளவு குறைந்துள்ளதை தொடர்ந்து, வழிபாட்டு தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கி கொள்ளப்பட்டு பொது போக்குவரத்துகள் இயங்கி வருகிறது.

அந்தவகையில், புனலூர்-கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுப்படுத்துவதற்காக செங்கோட்டை-கொல்லம் - செங்கோட்டை (06659/ 06660) விரைவு சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரையிலும், முழுமையாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.

இதற்கிடையே மின்மயமாக்கல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த ரயில்கள் மேலும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செங்கோட்டை - கொல்லம் சிறப்பு ரயில் (06659) மார்ச் 21ம் தேதி வரையும், கொல்லம்- செங்கோட்டை சிறப்பு ரயில் (06660) மார்ச் 22ம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேப் போன்று நெல்லை- பாலக்காடு, நெல்லை-பாலருவி மற்றும் சென்னை-கொல்லம், சென்னை-கொல்லம் மெயில் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad