ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோ வெளியானதால் திருமணம் ஆகாத இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த 35 வயதான பசுவண்ணா என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். பசுவண்ணாவுக்கு திருமணம் ஆகாத நிலையில், இளம்பெண் ஒருவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்ததை அவரே தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதோடு அந்த வீடியோவை நண்பர்கள் சிலருடம் காட்டி மகிழ்ச்சியில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுவண்ணா பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோ முகநூலில் வெளியானது. இதுகுறித்து பசுவண்ணாவின் நெருங்கிய உறவினர்கள் கேட்டுள்ளனர்.
இதனால், மன உளைச்சில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று காலை தாளவாடி அருகே உள்ள தனது தோட்டத்தில் பசுவண்ணா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மிரட்டிய வாலிபர் - கம்பி எண்ண வைத்த போலீஸ்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பசுவண்ணா உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு, வீடியோ வெளியானதால் பசுவண்ணா தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பசுவண்ணா, பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோவை முகநூலில் பதிவிட்டது யார்? அவருக்கு அந்த வீடியோ எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் ஆகாத இளைஞர் ஒருவர் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்து அந்த வீடியோவால் தற்போது உயிரையே இழந்துள்ள சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment