பிஞ்சு குழந்தைகளை தூக்கில் மாட்டிய தாய்... தானும் தற்கொலை..! கிருஷ்ணகிரி அதிர்ச்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 6, 2022

பிஞ்சு குழந்தைகளை தூக்கில் மாட்டிய தாய்... தானும் தற்கொலை..! கிருஷ்ணகிரி அதிர்ச்சி

கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயத்ரியின் மாமனார் ஜெயசந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 6மாதத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் தற்போது அதே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரியில் துயரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (36). இந்த தம்பதிக்கு கனிஷ்கா(7), சர்வன் (3) என இரு பிள்ளைகள் இருந்தனர்.

தூக்கிலிட்டு தற்கொலை

வெங்கடேஷ் தொழில் நிமித்தமாக திருப்பதிக்கு சென்றுவிட்ட நிலையில் காயத்ரி தனது இரு குழந்தைகளுடன் நடுப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் காயத்ரி இரு குழந்தைகளையும் தூக்கில் மாட்டிவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை

இச்சம்பவம் அறிந்து வந்த மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து மூன்று பேர் உடலையும் கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை

மேலும், காயத்ரியின் மாமனார் ஜெயசந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 6 மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. தற்போது அதே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் 36 வயதான பெண் தனது மகள் மற்றும் மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் காயத்ரி குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதன் காரணம் குறித்து போலீசாரின் விசாரணைக்கு பின்னர் தெரிய வரும்.
உதவுங்கள்:

யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து கீழ்கண்ட தற்கொலை தடுப்பு அமைப்புகளின் ஹெல்ப்லைன் எண்களை தொடர்புகொள்ளலாம்.

தமிழ்நாடு

மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை உதவி எண்: 104

சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050

No comments:

Post a Comment

Post Top Ad