இனிமே இன்டர்நேஷனல் லெவல்தான்... கெத்து காட்டும் அண்ணா யுனிவர்சிட்டி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 17, 2022

இனிமே இன்டர்நேஷனல் லெவல்தான்... கெத்து காட்டும் அண்ணா யுனிவர்சிட்டி!

உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக தமிழக பொறியியல கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு இருந்த வேலைவாய்ப்பு இன்று இருக்கிறாதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையே காரணம்.
அதேசமயம் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகளை ஏற்று வேலைவாய்ப்புக்கான கல்வியை வழங்கும் விதமாக பாடத்திட்டம் மாற்றப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், உலக அளவில் வளரும் தொழில்நுட்பத்திற்கேற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்த பயிலரங்கு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, "உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக தமிழகத்தின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும்.
தொழிற்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும்போது, அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்ய வேண்டும். படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை மாணவர்கள் பெற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம்" என்று அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.

அமைச்சரின் இந்த வலியுறுத்தலையடுத்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் உலகத்தரத்துக்கேற்ப மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad