மூதாட்டியிடம் இழிவான செயல்களில் ஈடுபட்ட முன்னாள் ஏபிவிபி தேசிய தலைவர் சுப்பையா சண்முகம் கைது
சென்னையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் குடியிருந்த குடியிருப்பில் வயதான பெண்மணி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தும், பயன்படுத்திய மாஸ்க்குகளை வீசிய செயல்களுக்காக முன்னாள் ஏபிவிபி தேசிய தலைவர் சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் வசித்து வரும் முன்னாள் ஏபிவிபி தேசியத் தலைவரும், டாக்டருமான சுப்பையா சண்முகம் மீது 62 வயதான பெண்மணி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதாவது அந்த பெண்மணி குடியிருப்பு வளாகத்தில் அவருக்கு சொந்தமான பார்க்கிங் பகுதியை சுப்பையா சண்முகம் பயன்படுத்தி வந்தார். அதற்காக மாதம் ரூ.1,500 மாதம் மாதம் கொடுத்துவிடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால், சுப்பையா ஜனவரியில் இருந்து மூதாட்டியிடம் பணத்தை கொடுக்காமல் இருந்துவந்துள்ளார்.
அதை அந்த மூதாட்டி கேட்டபோது சுப்பையா பிரச்சினை செய்துள்ளார் . மேலும், மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தும், கொரோனா பாசிட்டிவ் வந்தும்கூட சுப்பையா பயன்படுத்திய மாஸ்க்குகளை மூதாட்டியின் வீட்டின் முன்பு கொட்டியும் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், மூதாட்டி சைவ உணவு உண்பவர் என தெரிந்தும் கோழிக்கறி சாப்புடுறீங்களா என அடிக்கடி மூதாட்டியிடம் கேட்டு வெறுப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் jantakareporter செய்தி வெளியிட்டுள்ளது.
சுப்பையாவின் இத்தகைய செயல்கள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த வழக்கில் அவரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான சுப்பையா சண்முகத்தை மதுரை எய்ம்ஸ் குழுவில் நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்ததும் நினைவு கூரத்தக்கது.
No comments:
Post a Comment