ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, அதே வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினியும், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், நளினிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, தொடர்ந்து நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும், சுதந்திர இந்தியாவில் எந்த வழக்கிலும் எந்த கைதியும் இதுபோல் நீதிமன்றத்தை நாடியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு மட்டும்தான் ஜாமீன் வழங்கியுள்ளதாகவும், அந்த உத்தரவு மற்ற கைதிகளுக்கு பொருந்தாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரை கொன்ற இவர்கள், வெறும் கொலை குற்றவாளிகள் மட்டுமல்ல எனவும், இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பு மற்றும் இந்திய அரசியல் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் கொலை வழக்கு இது எனவும் கூறியுள்ளார்.
இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகி விடும் எனவும், கைதிகளுக்கு ஆதரவாக மாநில அரசு வாதங்களை முன்வைக்கும் என்பதால் தன்னையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
நளினியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது. தென்சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment